அடுத்துப் பெருமாளிடம் சென்றோம்: இது புரட்டாசியின் கடைசிச் சனிக்கிழமை, அவருடைய பெரிய அலங்காரங்களுள் கடைசி. மூலஸ்தானம் அப்போதுதான் திறக்கிறது. அனுமன், பூவேலை செய்த வசீகரமான பச்சை உடையில். மாமுனிகள் உற்சவம் எப்போது தொடங்கும், மற்ற எல்லாவற்றுடன் ஒப்பிட அது எப்படி இருக்கும் என்று இப்போது யோசிக்கிறோம் … தேசிகர் உற்சவத்தைப் பெரும்பாலும் தாங்குபவர்கள் ஐயங்கார்கள், மாமுனிகள் உற்சவத்தைச் செய்பவர்கள் நாயுடுகள், அதனால் இரண்டும் தன்மையிலேயே வேறுபட்ட உற்சவங்கள் என்று சேகர் மாமா எங்களிடம் சொல்லியிருக்கிறார்.




