இரவு 9 மணிக்குப் பின் செல்கிறோம். வெளியே தற்காலிக மண்டபத்தில், தசாவதாரங்களைப் போற்றும் நடனம். உள்ளே எல்லாம் மூடும் நேரத்தில், கோயில் கதவுகள் சற்றே திறந்துள்ளன. இறுதி நிறைவுப் பிரசாதத்திற்கு எங்களை அழைக்கிறார்கள் – சூடான பாலும் நெய் நிறைந்த கேசரியும். வெளியேயுள்ள நடனக் குழுக்களுக்கும், அவர்களுக்கே உரிய உற்சவர் அலங்காரத்திற்கும் நாள்தோறும் நடக்கும் பூசைகளுக்கும், பெருமாள் கோயிலுடன் முறையான தொடர்பு எதுவும் இல்லை. இதையெல்லாம் ஏற்பாடு செய்வது “இந்து முன்னணி” என்கிறார் பிரசன்னா; ஆனால் பலகைகள் விஎச்பி என்கின்றன. சில நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக உள்ளன.




