அந்நாளின் நிகழ்ச்சி நிரல் பல தெய்வங்களுக்கு அதிகாலை அபிஷேகங்களைக் குறிப்பிடுகிறது (கீழே காண்க); ஆனால் எதுவும் சீக்கிரம் நடக்கவே இல்லை. நான் (அருண்) சற்று நேரம் அங்கே இருக்கிறேன், எதுவும் நடக்கவில்லை. எப்போது நடந்தது என்று தெரியவில்லை.
மாலையில், யாகசாலையில், வைகாசிப் பிரம்மோற்சவத்திற்கு இருந்த அர்ஜுன் குருக்களும், சித்திரையில் ஏகாதச ருத்ராபிஷேகத்திற்கு இருந்த, IFPயின் அறிஞர்-அர்ச்சகரும் ஸ்ரீ மகாவித்யா லலிதா திரிபுரசுந்தரி ஹோமம் செய்கிறார்கள். ஹோமத்தில் எல்லா அம்சங்களிலும் மலர்கள் – கலசங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, ஒவ்வொரு கலசத்திற்கும் தாமரைகள். திரவியங்கள் நிறைந்த வழக்கமான கூடைகளுடன், மலர்கள் நிறைந்த கூடுதல் கூடை ஒன்று. ஹோமக் குண்டத்தில் எல்லாத் திசைகளையும் மலர்கள் குறிக்கின்றன. பராசக்தி உள் புறப்பாடு – ஹோமத்தின் பூர்ணாகுதி நடக்கும்போது யாகசாலையில் நிற்க, தேவிக்குத் தீபாராதனையும் மலர்களும் சமர்ப்பிக்கிறார்கள்.
அந்நாளின் நிகழ்ச்சி நிரல்:
காலை 7 - காசி விஸ்வநாதருக்கு அபிஷேகம் (செலவை ஏற்பது சிறுத்தொண்ட நாயனார் சபை); பின்னர் விநாயகர், சுவாமி, அம்பாள், பிறகு பராசக்திக்கும். விசாலாட்சிக்கு ராஜமாதங்கி அலங்காரம்
மாலை - துர்க்கை பூசை, ஆராதனை, விநியோகத்துடன்.




