காலையில் விநாயகர், சுவாமி, அம்பாள், பிறகு பராசக்திக்கு அபிஷேகம் (எல்லாம் நொடிப்பொழுதில் நடந்துவிடுகின்றன; முன்னர் அங்கே இருந்து, சற்று நேரத்தில் நான் (அருண்) திரும்புவதற்குள் எல்லாம் முடிந்துவிட்டன). ஆரோஃபார்மில் பணிபுரிவதாகச் சொல்லப்படும் ஒரு பெண்மணி (பின்னர் அவர் அங்கே நுழைவதைக் காண்கிறோம்) செய்த ஆஞ்சநேயர் பூசையும் இருந்தது. இப்பூசையைச் செய்வது கடந்த பதினைந்து ஆண்டுகளாகத் தம் மனதில் இருந்ததாகவும், இன்றுதான் நிறைவேறியதாகவும் என்னிடம் சொல்கிறார். சூழ்நிலைகள் கூடிவரப் பதினைந்து ஆண்டுகள் நீண்ட காலம்; ஆனால், “அது அவருடைய விருப்பம், அவருடைய முடிவு; நவராத்திரியின் முதல் நாளிலேயே இறுதியில் கூடிவந்தது எவ்வளவு பாக்கியம் பாருங்கள்,” என்கிறார்.
மாலையில் பராசக்தி உள் புறப்பாடு: அவரை வடகிழக்கு மூலையிலுள்ள கொலு மண்டபத்திற்குக் கொண்டுவருதல்; அடுத்த ஒன்பது நாட்கள் அங்கேயே இருப்பார்.




