5:30 மணிக்குச் செல்கிறோம்; பராசக்தி (உண்மையில் வைத்தீஸ்வரரின் துணைவி தையல்நாயகி) அபிஷேகம் பெரும்பாலும் முடிந்துவிட்டது. இது எவ்வளவு விரிவானது என்று தெரியவில்லை; பழங்களோ பாலோ இருந்த அறிகுறியும் இல்லை; ஆனால் சந்தனப் பாத்திரத்தை மூலஸ்தானத்திற்கு எடுத்துச் செல்லும்படி அர்ச்சக உதவியாளர் என்னிடம் சொல்கிறார்: எனவே அதைப் பயன்படுத்தியது உறுதி. இந்நீண்ட உற்சவ மண்டபத்தின் வலப் பாதியை எடுத்துக்கொண்டுள்ள கொலுவின் இடப்புறத்திலுள்ள சன்னிதியில் பராசக்தி அமர்ந்திருக்கிறார். அவருக்குத் தங்கக் கவசம் சாத்தப்படுகிறது; அவருக்கும், கொலு அமைப்பின் நடுவில் அமர்ந்துள்ள தனி அம்பாளுக்கும் மிக விரைவான பூசை. எல்லாம் 15 நிமிடங்களில் முடிகிறது; இதற்கிடையில், இன்றைய நிகழ்ச்சிக்கான ஆடல், பாடல் கலைஞர்கள் வெளியேயுள்ள மேடையில் தயாராகிறார்கள். எல்லா நவராத்திரி நாட்களிலும், கௌசிக கோயிலில் வெளியே இத்தகைய நிகழ்ச்சிகள் உண்டு.




