இரவு 8 அளவில், உற்சவ மண்டபத்திற்கு வெளியே இரண்டு வரிசைகளில் பெண்கள் அமர்ந்து பூசையைக் காண்கிறார்கள். முதன்மைச் சன்னிதி மண்டபத்தில், பூசை முடிவதை எதிர்பார்த்து, ஆண்கள் தட்டுகளில் பிரசாதம் வைக்கிறார்கள். பெண்கள் பாட அர்ச்சகர்கள் சற்று நேரம் ஒதுக்குகிறார்கள். பிறகு குங்கும அர்ச்சனையுடன் நவராத்திரிப் பூசை தொடர்கிறது. பின்னர் தீபாராதனையும், வழக்கம் போல விநியோகமும் இருக்கும்; ஆனால் அதற்கு நாங்கள் இருக்கவில்லை. பெருமாள் அழைக்கிறார்; தாயாரின் அறையிலிருந்து அவர் வெளிவருவதைத் தவறவிட நாங்கள் விரும்பவில்லை!




