இரவு 8:30; உற்சவ மண்டபக் கதவுகள் இன்னும் திறக்கவில்லை. ‘தொறக்கற நேரம்தான்,’ என்கிறார் ஒரு பெண்மணி. மூலஸ்தானத்திற்குள் பூசை, தெய்வத்திற்குப் போலவே விளக்குகளுக்கும்; தெய்வம் தூபப் புகையால் மூடியிருந்தாலும், ஏறத்தாழத் தரையிலிருந்து கூரை வரை, வரிசை வரிசையாக எளிய மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளார். அடுத்து உற்சவ மண்டபம் திறக்கும்போது, துர்க்கை எனத் தோன்றும் அலங்காரம்.
பூசைக்கு முன்னர் பக்தர்கள் கைகளால் தொடுவதற்காகக் கொண்டுவரப்படும் அர்ச்சகரின் தட்டில் ஒரு கிண்ணம் சிவப்புக் குங்குமமும்…. மீண்டும் தமனமும்; அர்ச்சகர்கள் மந்திரங்கள் ஓதும்போது அவர்மேல் தூவப்படுகிறது. இது வெறுமனே பருவத்தின் தற்செயல், வேறொன்றுமில்லை என்பது எப்படி? இன்று தமனம் சற்று மிகையாகவே இருக்கிறது எனத் தோன்றுகிறது.




