இன்று அவர் தவக்கோல அலங்காரத்தில்: தவம், தியானம், அமைதியின் யோக நித்திரை நிலை. அவருடைய முகம் நீலத்தில், கண்கள் மூடி; அதற்குப் பொருத்தமான, கட்டங்கள் போட்ட பளிச்சென்ற புடவை. அவருடைய வடிவம் உருவாவதைக் காண முன்னர் நின்றிருந்தோம்; ஆனால் மற்ற வேலைகளைச் செய்யப் புறப்பட்டோம்; மாலையில் திரும்பி, நிறைவடைந்த வடிவில் அவரைக் கண்டபோது சற்று வருந்தினோம் – பேரழகு, மஞ்சளும் நீலமுமான மலர் மாலையுடன். அவருடைய புடவைக்கு மேலும் பொருந்த அர்ச்சகர்கள் வாடாமல்லி கேட்டிருந்தார்கள்; ஆனால் அதற்குப் பதிலாக இது கிடைத்தது; அது அவருடைய முகத்துடன் கச்சிதமாகப் பொருந்தியது. பூசை வழக்கம் போல நாடகத்தன்மை மிக்க, கச்சிதமாக வடிவமைத்த நிகழ்வு. பின்னர் சகோதரர்கள் இருவரும் பாடி, காமாட்சி அஷ்டகம் ஓதினார்கள் (எனவே சிறிது சமஸ்கிருதம் வரத்தான் செய்கிறது).
(கௌசிக, சுந்தர விநாயகர் கோயில்களுக்கும் இங்கும் எங்களுடன் வந்த ரித்தி ஷாவுடன் சென்ற நாள் இது).




