நுழையும்போது 3 அர்ச்சகர்களும் ஹோமம் செய்துகொண்டிருக்கிறார்கள், ஓதல் ஒலிவாங்கியில் ஒலிக்கிறது. பிறகு ஒலிவாங்கி இல்லாமல், ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் அக்கினிக் குண்டத்திற்குச் செல்ல, கூர்ச்சத்துடன் ஓதல் தொடர்கிறது. இதைப் புரிந்துகொள்வது கடினம். திரை மூடுகிறது, வெகு முன்னரே பிரசன்னா கொண்டுவந்த பிரசாதத்திற்காகப் போலும்; மணிகள் ஒலிக்கின்றன, மேலும் ஓதல், பிறகு தூபம், தீபாராதனை
ஹோமம் முடிந்ததும், முதன்மைப் பவித்ர அர்ச்சகருக்குத் தலைப்பாகை கட்டுகிறார்கள்; பிறகு வண்ணப் பவித்ரத்தை எடுத்து முதன்மை மூர்த்திக்குச் சாத்துகிறார்கள்; பிறகு நரசிம்மர், கோதண்டராமர், பிறகு பாண்டுரங்கன், தாயார், யாகசாலையிலுள்ள எல்லாக் கலசங்கள், ஆண்டாள், ஆழ்வார் சன்னிதி, கருடன், இறுதியில் அனுமன். இதன் பிறகு, எளிய மஞ்சள் பவித்ரத்தை முதன்மைக் கோயிலின் எல்லாச் சுதை உருவங்களுக்கும், கோபுரம், விமானம், த்வஜஸ்தம்பம் முதலியவற்றுக்கும் கட்டுகிறார்கள். நரேஷ் பட்டாச்சாரியார் வியக்கத்தக்க அளவு ஏறினார். நடனக் கலைஞருடையவை போன்ற அவருடைய பாதங்களை அருண் கவனித்தார். (“தாமரை”க்குப் பவித்ர மாலை போடுவது பற்றி அர்ச்சகர்கள் வேடிக்கையாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்: பாஜகவைப் பற்றிய மறைமுகக் குறிப்பு).
வண்ணப் பவித்ரத்தைக் கட்டுவதற்கு முன்னர் ஏதோ ஒரு கட்டத்தில், மெல்லிய மஞ்சள் பவித்ரத்தை முதன்மைச் சன்னிதிக்கு எடுத்துச் சென்று, மாலையாகவும், குறிப்பாக மூலவர், உற்சவர் உருவங்களின் கைகளிலும் கட்டுகிறார்கள். எல்லா ஆரவாரத்துடனும். அர்ச்சகர் பச்சைத் தலைப்பாகை அணிவதற்கு முன்னரே இது நடக்கிறது, பின்னர் அல்ல என்று நினைக்கிறேன்.
பிறகு சுவாமி புறப்பாடு; அடுத்த ஹோமத்தைக் காண மூர்த்திகளை யாகசாலைக்குக் கொண்டுவருகிறார்கள்
மேலும் ஒரு ஹோமக் காலம் தொடர்கிறது – பஞ்ச சூக்தங்கள் – புருஷ சூக்தம், நாராயண சூக்தம், விஷ்ணு சூக்தம், ஸ்ரீசூக்தம், பூ சூக்தம்/ துர்கா சூக்தம் + மற்ற ஓதல்கள்.
தொடர்ந்து பூர்ணாகுதி: 3 பூர்ணக் கூடைகள் யாகசாலையைச் சுற்றி வர, பிறகு அவற்றிலுள்ளவை நடு நெருப்பில் இடப்படுகின்றன.
உபயகாரர்களுக்கு அர்ச்சனை, சிறிய தீபாராதனை, பிரசாதம் (சர்க்கரைப் பொங்கல், புளிச் சாதம், தயிர் சாதம்).
நமகம் சமகம் அன்றாட ஹோம வழக்கத்தின் ஒரு பகுதி என்று தாதாச்சாரியார் என்னிடம் சொல்கிறார்; ஆனால் வாய்ப்பே இல்லை என்கிறார் ரமணன் பட்டாச்சாரியார். எனவே அடுத்த ஹோமக் காலங்களும் அதே வழக்கத்தைப் பின்பற்றுகின்றன போலும். துர்கா சூக்தத்தை ஏன் ஓதுகிறார்கள்?
ஸ்ரீமத் பாகவதத்தின் பத்தாம் ஸ்கந்தம், கிருஷ்ணரின் தெய்வ அவதாரத்தை எடுத்துரைக்கும்போது, பரம்பொருளாகிய கிருஷ்ணருக்கும் துர்க்கைக்கும் இடையேயான தொடர்பை வெளிப்படுத்துகிறது.
துர்க்கை (யோகமாயை இறைவனின் உள்ளார்ந்த சக்தி; துர்க்காதேவி அவருடைய விரிவு) யசோதைக்குப் பிறந்து, தேவகிக்கும் வசுதேவருக்கும் கிருஷ்ணர் பிறக்கும்போது அவருக்கு மாற்றாகிறார். எனவே அவர் யசோதையின் மகள், கிருஷ்ணரின் சகோதரி; பல வடிவங்களில் அறியப்பட்டுப் போற்றப்பட வேண்டியவர்: துர்க்கை, பத்ரகாளி, விஜயா, வைஷ்ணவி, குமுதா, சண்டிகா, கிருஷ்ணா, மாதவி, கன்யகா, மாயா, நாராயணி, ஈசானி, சாரதா, அம்பிகா
துர்க்கை கிருஷ்ணரின் சகோதரி – ஆண்டாள் கிருஷ்ணரின் மனைவி என்றால், துர்க்கை ஆண்டாளின் நாத்தனார் (!!!!)
தன் அண்ணிக்குத் திருமணத்தின்போது உடை தருபவர் அவரே. நாச்சியார் திருமொழி (ஆறு பத்துல மூணாம் பாட்டு) 6.3இல் ஆண்டாள் அவ்வாறே சொல்கிறார்:
இந்திரன் உள்ளிட்ட தேவர்-குழாம் எல்லாம்
வந்திருந்து என்னை மகட் பேசி மந்திரித்து
மந்திரக் கோடி உடுத்தி மண-மாலை
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்
*அந்தரி என்பவர் துர்க்கை. இப்பாடலைப் பற்றி மேலும்
பின்னர், 143 பாசுரங்களைப் பற்றித் தாதாச்சாரியார் குறிப்பிடுகிறார் – 143 என்றால் என்ன என்று எங்களிடம் கேட்கிறார்: ஒரு எழுத்து, ரெண்டு எழுத்து, மூணு எழுத்து – நான் விடை தெரியாமல் நிற்க, “I LOVE YOU” என்கிறார்; ஏனெனில் அங்கும் 143 என்ற அமைப்பு உண்டு; நாச்சியார் திருமொழி பெருமாளுக்கு ஒரு காதல் கடிதம் (முதலாவது, பெருமாளுடன் தன்னைச் சேர்க்கும்படி காமனிடம் வேண்டுவது).
இதைக் கேட்டதும் வாய்விட்டுச் சிரித்துவிட்டேன். இதை நவீன முறையில் சொன்னீர்கள் என்றேன். நவீன முறையில்தான் சொல்ல வேண்டும் என்று பதிலளித்தார்.
இன்றைய வெளியிட்ட நிகழ்ச்சி நிரல்:
காலை 8:00 — கலச ஸ்தாபனம், ஹோம ஆரம்பம்; திருப்பவித்ரப் பிரதிஷ்டை; ஸ்ரீதேவி–பூதேவி சமேத பெரிய பெருமாள் மூலவர்; விமானத்திற்கும் ராஜகோபுரத்திற்கும் பவித்ரச் சடங்குகள்; தத்துவ ஹோமம்; பூர்ணாகுதி; சாற்றுமுறை
இரவு 7:00 — ஹோமமும் பூர்ணாகுதியும்; சாற்றுமுறை




