நான் நுழையும்போது வாஸ்து பூசை தொடங்குகிறது. உற்சவ மூர்த்திகளை அலங்கார மண்டபத்திலிருந்து தற்காலிகப் பவித்ரோற்சவ மண்டபத்திற்குக் கொண்டுவருகிறார்கள். சற்று நேரத்தில், திருக்குமரன் உட்பட அர்ச்சகர்கள், கலசங்களுக்கு முன்னேயுள்ள வண்ண மண்டலத்தை இடுவதை/ அதில் சேர்ப்பதைக் காண்கிறோம். திருக்குமரன் தர்ப்பைப் புல்லால் நான்கு கால்களுடன் மேரு போன்ற ஓர் அமைப்பையும் செய்து, அதை மலர்களால் மூடுகிறார். மலர் சூடிய இந்த மேரு போன்ற கூர்ச்சத்தை மண்டலத்தின் நடுவில், 4 கால்களும் அதன் 4 மூலைகளுக்கு நீளும்படி வைக்கிறார்கள். வாஸ்து ஹோம நெருப்பில் உருவை எரித்துச் சுற்றி எடுத்துச் செல்கிறார்கள்.
வடகிழக்கு மூலையில் 9 சிறிய கலசங்கள்.
வடமேற்கு மூலையில் 7 சிறிய கலசங்கள் + உயரமான ஒரு முக்காலியின்மேல் மேலும் 3 சிறியவை.
தென்கிழக்கு மூலையில் 6 சிறிய கலசங்கள்
தென்மேற்கு மூலையில் 8 சிறிய கலசங்கள்
புதிய ஒரு முதிய அர்ச்சகர் முதன்மைப் பூசையைத் தொடங்கி வைக்கிறார். கலசம் கலசமாகச் சென்று, வாஸ்து ஹோமத்திலிருந்து வந்தது போலும், சிறிது நீரைத் தெளித்து, மலர்களையும் அழகாகத் தூவுகிறார்.
மண்டலத்திற்கும் நடுக் கலசங்களுக்கும் சந்தனமும் பூசைக்கான முத்திரைகளும். இரவு 9 அளவில் ஹோமம் தொடங்குகிறது. நான் கண்ட ஹோமங்களுள் ஒருவேளை மிகவும் ஈர்த்தது இதுவே. அக்காட்சியிலும், காட்சிக்குள்ளிருந்த சுடரிலும் ஏதோ ஒன்று, அதை மிகவும் ஆற்றலுடையதாக்கியது.
அது நிறைவடைவதற்கு முன்னர் புறப்படுகிறோம்.
அந்நாளுக்கு வெளியிட்ட நிகழ்ச்சி நிரல்:
மாலை 6:00: அனுக்ஞை, விக்னேஸ்வர பூசை, வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரகணம்.
இரவு 7:30: ஸ்தண்டில மண்டலேஸ்வரப் பிரதிஷ்டை, யாகசாலைப் பூசை தொடக்கம்.




