பென் டிரைவை வாங்கவும் அர்ச்சகருக்குப் புகைப்படங்கள் தரவும் திரௌபதி அம்மன் கோயிலுக்குச் சென்றோம். 10 நாட்களுக்கு முன்னர் கரகத்திலிருந்து எடுத்து, ஏறத்தாழ முழுப் புத்துணர்வுடன் வைத்திருந்த ஓர் எலுமிச்சையை எங்களுக்குத் தந்தார். அது தம் மகளின் இடைவிடாத மாதவிடாய் ரத்தப்போக்கைக் குணப்படுத்தியதாகச் சொன்னார். எலுமிச்சை, காக்கும், தீய/ கண்திருஷ்டி சக்திகளை உறிஞ்சும், “உயிர்” உள்ள ஒரு பொருள். இக்கோயிலில் தெய்வத்தின் “தலையாக”ப் பயன்படுவதில்லை. தம் இதய பைபாஸ் சிகிச்சையைப் பற்றியும், அதில் எப்படிப் பிழைத்தார், மேலும் சிகிச்சைகள் தேவைப்பட்டபோது அவர்கள் (குடும்பத்தினர்) மறுத்ததைப் பற்றியும் மீண்டும் பேசினார். “கடவுள் மேல நம்பிக்கை இருக்கா” என்று மருத்துவர் கேட்க – ரங்கராஜு சிரித்து, “என்மேல நம்பிக்கை வெச்ச கடவுளே இருக்காளே!” என்கிறார்.




