புதுச்சேரியின் பாரம்பரிய நகரிலுள்ள திரௌபதி அம்மன் திருக்கோயில் பழைய வரைபடங்கள் எதிலும் குறிக்கப்படவில்லை, ஆனால் காலனியக் காலத்திலிருந்தே இருந்ததாக அறியப்படுகிறது. தர்மராஜாவின் கோயில் (தெருப் பெயர்ப் பலகைகளில் ஈஸ்வரன் கோயிலுடன் அவர் பெயரும் உள்ளது), திரௌபதி அம்மனின் கோயில் என இக்கோயிலுக்கு இரட்டை அடையாளம் உண்டு. பரம்பரை வன்னியர் பூசாரி ஒருவர் நாள்தோறும் இருமுறை பூசை செய்கிறார்; காலையில் மட்டும் எளிய அபிஷேகம். ஒரே குடும்பம் 10 தலைமுறைகளாக இக்கோயிலைக் கவனித்து வருகிறது; கடைசிச் சில தலைமுறையினரின் புகைப்படங்கள் கோயிலின் முன்மண்டபத்தில் தொங்குகின்றன. கோயிலின் முக்கியத் திருவிழா, 25 நாள் அக்கினி வசந்தத் திருவிழா; அது ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை அடுத்த திங்கட்கிழமை தொடங்குகிறது; அதன் புகழ்பெற்ற தீமிதி, அதன் பின் வரும் மூன்றாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. வில்லிபுத்தூரார் தமிழில் மீண்டும் சொன்ன 14ஆம் நூற்றாண்டு மகாபாரதமாகிய வில்லி பாரதத்திலிருந்து பாராயணமும் கதை சொல்லலும் நாள்தோறும் மாலையில் நடக்கின்றன. அந்நாளின் வழிபாடுகள் கொண்டாடவிருப்பதை, அல்லது அவையே மீண்டும் நிகழ்த்தவிருப்பதை, ஒவ்வொரு பகுதியும் விரித்துரைக்கிறது. திரௌபதி அம்மன் கிழக்கு நோக்கியவர், ஆனாலும் அவர் கோயிலின் நுழைவாயில் தெற்கு நோக்கியது.