ஆடிப்பூரம் கன்னிகா பரமேஸ்வரியின் நட்சத்திர நாள்; எனவே காலை 7:30 மணிக்கு அவருக்கு அபிஷேகம்.
நாங்கள் 8:30 அளவில் செல்கிறோம். அபிஷேகத்திற்குப் பின்னான அலங்காரம் முடிந்துள்ளது. பெண்கள் மண்டபத்தை அமைக்கிறார்கள்: டஜன் கணக்கில் தொங்கும் வளையல்களும், தென்னை ஓலைகளாலான பறவைகளும்: வளையல்காப்பு அலங்காரத்தை அவர்கள் செய்யும் விதம் இது. இதன் பின்னேயுள்ள படைப்பாற்றல் மேதை, சிவப்பு உடையிலுள்ள பெண். எல்லாவற்றுக்கும் நடுவே ஆண்டாளின் புகைப்படம்; அதுவும் அவருடைய நட்சத்திர நாள்தானே. பிரசாதம் பெற்றுக்கொண்டு புறப்படுகிறோம்; ஆனால் மீதிப் பூசை ஐயமின்றி மற்றக் கன்னிகா பூசைகளின் முறையிலேயே நடக்கும்: அர்ச்சகர் ஓத, பெண்கள் மலர்த் தட்டுகளுடன் அமர்ந்து, அல்லது அவர் தம் பாராயணத்தைச் செய்ய, அவர்கள் தங்கள் பாராயணத்தைச் செய்து.
இம்முயற்சி உலக ஆரியவைசிய மகாசபை மகிளா விபாகினுடையது.




