காலை 6 திருவாடிப்பூரச் சிறப்பு அபிஷேகம்
காலை 6 மணி, அபிஷேகத்திற்கான அறிகுறியே இல்லை. எல்லாம் அமைதி. 7:30க்குத் திரும்பிச் செல்கிறேன், எல்லாம் முடிந்துவிட்டது. எளிய சிறப்பு அபிஷேகமாக இருந்திருக்கும் எனத் தோன்றுகிறது.
காலை 10:30 108 சங்காபிஷேகம்
பெருமாள்-ஆண்டாள் அபிஷேகத்தைக் கண்ட பின் செல்கிறேன். மூலஸ்தானத்திற்குள் நுழைய வரிசையில் நிற்கும் பெண்களுக்குச் சங்குகள் தருகிறார்கள். ஸ்ரீராம் குருக்கள் ஒவ்வொரு சங்கிலும் நீரும், உலர்ந்த அருகம்புல்லின் ஓர் இழையும் (என்று நினைக்கிறேன்) நிரப்புகிறார். ஹோமக் குண்டம் நந்திக்கு இடப்புறத்தில் முன்னே; அதன் தலைமாட்டில், மேற்கே, கலசம். பெரிய, கடைசிச் சங்கும் ஏற்கெனவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.
மாலை 6 திருவிளக்குப் பூசை: இது நடக்க வேண்டியது; ஆனால் அடுத்த வெள்ளிக்கிழமைக்குத் தள்ளிப்போனது!!




