எங்கள் காலை விநாயகர் பந்தல் வருகைகளுள் கடைசி, கடற்கரைக்கு ஒரு வீதி முன்னர், வன்னியர் வீதியின் கடைக்கோடியிலுள்ளது. நகரின் மிகப் பழைய பந்தல் அது, 47 ஆண்டுகள் பழையது என்கிறார்கள். இவ்வாண்டு, உடற்பயிற்சிக் கூடம் செல்லும், அரக்கனை வதைக்கும் வடிவில் விநாயகர்; எல்லோரும் “சிக்ஸ்-பேக் விநாயகர்” என்று அழைக்கிறார்கள். உண்மையிலேயே விநாயகர் மட்டுமல்ல, அரக்கனும், அவ்வளவு சிறியதல்லாத மூஷிகமும் நன்கு செதுக்கிய உடலைக் காட்டுகிறார்கள். பந்தலில், இரண்டு பையன்கள் ஒரு சிறிய களிமண் விநாயகருடன் விளையாடுவதைக் காண்கிறோம், அவருக்கு விபூதியும் குங்குமமும் இட்டுக்கொண்டு. சொப்புச் சாமான்களுடன் விளையாடியதை நினைவூட்டுகிறது.
அக்கம்பக்கத்தவர் யாரும் எப்போதும் அங்கே இல்லாவிட்டாலும், இவை ஒரு பகுதி தன் குழந்தைகளை ஆதரித்து வளர்க்கும் வழிகள் என்று எண்ணிப் பார்க்கிறோம். இந்நிகழ்வுகள் குழந்தைகளை உறுதியாக நிலைநிறுத்தி வேரூன்றச் செய்கின்றன எனத் தோன்றுகிறது, அப்படியே இருக்கும் என்று நம்புகிறோம். அக்கம்பக்கத்தை ஒன்றுசேர்ப்பதால் மட்டுமல்ல, பையன்களுக்குச் சமயத்தில் ஒரு குவிமையத்தைத் தருவதாலும் – தெய்வத்தைப் பையன்களின் இயல்புக்கும் விருப்பங்களுக்கும் ஏற்ப மாற்றிக்கொள்ளத் தாராளச் சுதந்திரத்துடன் என்றாலும். ஆனாலும் அது, சமய, பண்பாட்டு மரபுடன் பையன்களின் தெளிவான ஒரு தொடர்பாகவே இருக்கிறது. விநாயகரின் மொத்தச் செலவு அடிக்கணக்கில் (2000/- என்று கேட்டோமா?).
விநாயகர் பந்தல்களுக்கும், கோயில்களிலிருந்து வீதிகளுக்குப் பூசைகளும் சடங்குகளும் வெளியே பயணித்ததற்கும் பால் கங்காதர திலகருக்குப் பெரிதும் நன்றி சொல்ல வேண்டும். முற்காலத்தில் கோயில் எப்படிச் சமூக, பொருளாதார வாழ்வின் மையமாக இருந்திருக்கும் என்பது பற்றிச் சில எண்ணங்கள் எங்களுக்கு எழுந்தன. விழுமியங்கள் கோயிலிலிருந்து எப்படிப் புறப்பட்டு, அதைச் சூழ்ந்த சமூக வாழ்வை உருவாக்கி, நன்கொடைகளாகக் கோயிலுக்கே திரும்பின என்பது பற்றியும்.
இன்றைய விநாயகர் பந்தல்கள் அளவில் எப்படி மிகையாகவும், தங்கள் முடிவுகளும் வழக்கங்களும் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் தாக்கத்தை எப்போதும் உணராமலும் உள்ளன என்பது பற்றிச் சில எண்ணங்கள். இந்த “மாபெரும்” விநாயகர்களின் அழகியலைப் பற்றியும், அவர்களைப் போற்றுவதில் பொருளும் பண்பாட்டுச் சூழலும் இல்லாததைப் பற்றியும் சில எண்ணங்கள்.