தவறவிட்டோம்
நேற்று விஸ்வகர்ம ஜயந்தியைத் தவறவிட்ட பிழையைச் சரிசெய்ய முயல, காலையில் காமாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றோம்! பெரியவரிடம் பேசித் திரட்டிய சில குறிப்புகள் [சடங்கு நாட்காட்டி ஆவணத்தில் சேர்த்தவை]:
விஸ்வகர்ம ஜயந்தி செப்டம்பர் 17 அன்று நடந்தது – நாங்கள் தவறவிட்டோம். விஸ்வபிரம்மாவுக்கும் காயத்ரிக்கும் வழக்கமான அபிஷேகம்-அலங்காரம்-தீபாராதனை.
டாக்டர் சங்கரா தேவியும் அங்கே இருந்தார்; விஸ்வகர்ம சமூகத்தின் வரலாற்றையும் தோற்றத்தையும் பற்றிப் பேசினார். தொடர்ந்து உறுப்பினர்களிடையே ஒரு கூட்டம், ஒருவேளை கும்பாபிஷேக நடவடிக்கைகளைப் பற்றி.
டாக்டர் சங்கரா தேவியின் தாய்வழித் தாத்தா, வள்ளி விலாஸின் உரிமையாளர் சுப்புராய செட்டியாரைப் பற்றியும் பெரியவர் தொடர்ந்து சொல்கிறார்: பெரியவரைக் கடலூரில் தேவாரப் பாடசாலையில் சேர்த்தவர், பின்னர் இக்கோயிலில் நியமித்தவர் அவரே.
பிற்பகலும் மாலையும் சட்டமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சர் வருகைகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்தன.
மக்களோ நிறுவனங்களோ ஒரு பரந்த வலைப்பின்னலுக்குள் தங்களை நிறுத்திக்கொள்ளும், மீண்டும் மீண்டும் காணும் போக்கை இன்றைய உரையாடலும் காட்டுவதைக் கவனித்தோம்: செட்டியார்களின் பெயர்களையும் குடும்பத் தொடர்புகளையும், அவர்கள் தம்மை எப்படி வளர்த்தார்கள் என்பதையும் பெரியவர் மளமளவென்று சொன்னதில் கண்டது போல.


