மாலையில் தேசிகர் சேவையும் புறப்பாடும். 7 அத்யாபகர்கள் பாடுகிறார்கள்; ஆண்டாள் சன்னிதிக்கு வெளியே கிருஷ்ண யஜுர்வேதப் பாராயணம் நடக்கிறது. இரவு 7:30 அளவில் புறப்பாடு தொடங்குகிறது. தேசிகர் அர்த்தமண்டபத்திற்கு வெளியே வந்து, பெருமாளின் ஆசியை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார். பெருமாளின் வருகையைத் தாதாச்சாரியார் உரத்து அறிவிக்க, தேசிகருக்கு ஆசி வழங்கப் பெருமாளின் சடாரி வெளிவருகிறது.
பின்னர் தேசிகர் மூன்று உள் புறப்பாடுகள் செல்கிறார்; ஒவ்வொரு முறையும் எல்லா மூலைகளிலும், முதல் சுற்றில் ஒருமுறை கண்ணாடியின் முன்னும் நின்று. மற்றச் சன்னிதிகளுடன் எந்தத் தொடர்பும் இல்லை. ஆழ்வார்களிடமோ ஆஞ்சநேயரிடமோ மணவாள மாமுனிகளிடமோ ஆசி பெறுவதோ அவர்களுக்குத் தருவதோ இல்லை. அது பெருமாள் அல்லது தாயார் புறப்பாடுகளில் மட்டுமே நடக்கும் என்கிறார் சேகர் மாமா. அப்படியானால், இவ்வாறு நிற்கும்போது, பெருமாள் ஆசி பெறுகிறாரா, தருகிறாரா? மூன்றாம் சுற்றின் முடிவில், தம் சன்னிதிக்கு வெளியே, தேசிகருக்குக் கும்பத்துடன் ஆராதனை செய்து, உணவு படைத்து, ஆட வைத்து, பிறகு சன்னிதிக்குத் திரும்பச் செய்கிறார்கள். தொடர்ந்து, முடிவைக் குறிக்கும் சாற்றுமுறைக்கு மேலும் சில பாடல்கள்.
ஹயக்ரீவர் கோயில் வெங்கடேச பட்டாச்சாரியாரின் மனைவி என்னிடம் சொல்கிறார்: பெருமாளின் நட்சத்திரம் ஹஸ்தம். ரங்கநாதருக்கு ரேவதி. மற்றவர்களுக்குத் திருவோணம். ஒரு போட்டியைத் தொடர்ந்து பாதுகா சகஸ்ரம் இயற்றப்பட்டதைப் பற்றியும் பேசுகிறார்.
கிருஷ்ண யஜுர்வேதப் பாராயணம்: காணொளி எடுக்கும்படி என்னிடம் கேட்பவர் இங்குள்ளவர்; ஆனால் மற்றவர்கள் இதற்காகச் சென்னையிலிருந்து வந்திருக்கிறார்கள். கிருஷ்ண யஜுர்வேதம், சம்ஹிதை பாகமா? மந்திரங்கள் யாகத்துடன் தொடர்புடையவை. கிரம பாராயணம்: எண்தொடர் வரிசையில் ஓதுவது—1-2, 2-3 என்று. தேசிகர் உற்சவத்துடன் இணைந்து ஓதுகிறார்கள்.
இங்கே நாங்கள் காண்பது ஒன்றுமில்லை, இருக்க வேண்டிய இடம் திருவஹீந்திரபுரமே என்று பின்னர் எங்களிடம் சொல்பவர் வேறு யாருமல்ல, ரமணன் பட்டாச்சாரியார். உரையாடல்கள் நடக்கின்றன; நிகழ்ச்சி நிரல் ஒன்று தேடிக் கண்டு அனுப்பப்படுகிறது; எப்போது/ எப்படிச் செல்வது என்ற பரிந்துரைகள் பகிரப்படுகின்றன!




