அபிஷேகம் காலை 9 மணிக்கு; அது முடிந்த பிறகே நாங்கள் அடைந்தோம். உள்ளூர்ப் பூசாரி ஒருவர் அலங்காரம் செய்துகொண்டிருக்கிறார். மூல மூர்த்தியின் வடிவைப் பிரதிபலிக்க வாமமுகி அல்லது இடம்புரி விநாயகரான உற்சவருக்கும் அவரே அலங்காரம் – எளிய ஒன்று – செய்துகொண்டிருந்தார். அழகிய வெண்கலத் திருமேனியின் நல்ல படங்கள் கிடைத்தன. யானையின் வடிவம், தலை மட்டுமல்ல, விநாயகர் முழுவதும் நிறைந்துள்ளது. பானை வயிற்றையும் தடித்த கைகளையும் விரல்களையும் தவிர, அவருடைய கால்களும் யானையுடையவை போல, மரத்தண்டுகள் போலத் தடித்து, அகன்ற உறுதியான பாதங்கள் தாங்க இருப்பதைக் கவனித்தேன். மூலவருக்கும் இரு உற்சவர்களுக்கும் அலங்காரம் முடிந்தது - ஆராதனையைக் கண்டோம். ராணி மேடமே இல்லாமல், சற்று வெறிச்சோடியிருந்தது. வீட்டில் சமையல் வேலை இருந்ததால் புறப்பட்டோம். அதன் பின் விரைவிலேயே உள் புறப்பாடு நடந்திருக்க வேண்டும்.




