← புதுச்சேரியின் கோயில்கள்

சுந்தர விநாயகர் கோயில்

எல்லையம்மன் கோயில் அருகே
வரைபடம்விரைவில்

கோயிலின் தளவரைபடம் (வரையப்படும் வரை ஒரு மாதிரிப் படம்)

பாரதி வீதியும் தில்லை மேஸ்திரி வீதியும் சந்திக்கும் இடத்திலுள்ள ஸ்ரீ பவானி அம்மன் ஆலயமும் ஸ்ரீ சுந்தர விநாயகர் திருக்கோயிலும் ஒரு குடும்பக் கோயிலாகும்; இப்போதைய உரிமையாளரின் கொள்ளுத் தாத்தாவான திரு. இரத்தினசபாபதி குருசாமி 1910இல் இதை நிறுவினார். இப்போது இதைப் பேணுபவர், நான்காம் தலைமுறையைச் சேர்ந்த திருமதி ராணி; ராஜேந்திரன் ஐயா பூசை செய்கிறார். கோயில் விநாயகருக்குரியது; ஆனால் வெளியே இடப்புறத்தில் தனியாக ஒரு பவானி அம்மன் சன்னிதியும், வலப்புறத்தில் ஒரு சுந்தரவதன கிருஷ்ணர் சன்னிதியும் உள்ளன. பின்னதை நிறுவியது உள்ளூர் யாதவர் சமூகம்; அவர்கள் தங்கள் ஜன்மாஷ்டமி விழாக்களுக்காக ஓர் உற்சவ மூர்த்தியை வாடகைக்கு எடுத்து வந்தனர்; பிறகு சுந்தர விநாயகர் கோயிலின் ஒரு பகுதியில் முழுமையான சன்னிதி ஒன்றை அமைத்துக்கொண்டனர். இரண்டு கோயில்களும் இடத்தைப் பகிர்ந்துகொள்கின்றன, ஆனால் ஒன்றையொன்று சாராதவை.

உள்ளே, கோயில் இயல்பாகவே வளர்ந்துவந்ததாகத் தோன்றுகிறது: முருகன் சன்னிதியை அமைக்க ஓர் அத்தை உதவினார் (கந்த சஷ்டிக்கு மறுநாள் திருக்கல்யாணத்தின் உபயமும் அவருடையது); ஆங்கில ஆண்டின் இறுதிப் பகுதியில் சபரிமலைக்கு யாத்திரை செல்ல விரும்புவோருக்காக எனத் தோன்றும் ஓர் ஐயப்பன் சன்னிதியும் உண்டு. வராகி அம்மனுக்கும் சப்த மாதர்களுக்கும் இடமளித்து, மாதம் இருமுறை பூசை செய்யும் ஒரே கோயில் புதுச்சேரியில் இதுவே. மேலும், பிரதோஷம், கிருத்திகை, ஆண்டின் ஆறு நடராஜர் அபிஷேகங்கள் முதலிய பல வார, மாத வழிபாடுகளை இக்கோயில் கடைப்பிடிக்கிறது. சுற்றுப்புறப் பெண்கள் பெரும்பாலும் இங்கே வந்து, வழிபாட்டுடன் தங்கள் குரலையும் சேர்க்கிறார்கள். கோயிலின் பத்து நாள் பிரம்மோற்சவம் விநாயக சதுர்த்திக்கு மறுநாள் தொடங்குகிறது; ஆனால் அதில் வீதிப் புறப்பாடு இல்லை.

களக்குறிப்புகள்

புகைப்படங்கள்

16 நவம்பர் 2026கந்த சஷ்டி 7ஆம் நாள், திருக்கல்யாணம்
எல்லாப் புகைப்படங்களும் (495)