8ஆம் நாள்: நாள் உற்சவம். இவ்வளவு துரத்தலுக்குப் பின், இன்று திரௌபதி அம்மனின் உற்சவருக்கு அலங்காரம் செய்தவர்கள் வேலை செய்த சுமார் நான்கு மணி நேரமும், இறுதியில் அவர்களுடன் அமர முடிந்தது. இன்று திரௌபதி அம்மனை மாரியம்மனாக மாற்றினார்கள். கைகால்கள், உடல், மார்பு சேர்வதைக் காண்பது ஈர்ப்பாக இருந்தது: உடல் விகிதங்கள் சற்றுத் தியாகம் செய்யப்பட்டாலும். இவ்வலங்கார மரபுகள் எப்போது தோன்றின, எப்படி வளர்ந்தன என்று தெரியவில்லை. ஆனால் இது, ஒரு சிறிய உற்சவ வடிவத்தை எடுத்து, வழக்கமாக அவருடைய அளவைவிடப் பல மடங்கான வாகனத்திற்கு அவர் தயாராகும்படி பெரிதாக்குவதைப் பற்றியது. அடையாளம் காணக்கூடிய வடிவங்களை உருவாக்குவதைப் பற்றியது: தெய்வ இருப்பை எளிதில் அணுகச் செய்யும் பாதைகள்; அதன் பிறகு, வெளிப்புறத்திலேனும் இவ்வாறு, அவரை அறிய முடிகிறது.



