பிரெஞ்சுக்காரர்களின் வருகை, அக்காலத்தில் இந்நகரில் பதிவான கோயில்கள், அவற்றை நாங்கள் காணும் வரைபடங்கள் முதலியவை பற்றிய வரலாற்றுக் கதைகளை ஒருங்கிணைக்கும் பணியில் இருந்தோம். அப்போது, புதுச்சேரியை அவ்வளவு ஆர்வத்துக்குரியதாகக் கண்ட பயணிகளும் பிறரும் வரைந்த, அக்காலக் கோயில் படங்களைக் கண்டோம். அவற்றுள் ஒன்று, பெருமாள் கோயிலாகத்தான் இருக்க வேண்டும் என்று எங்களுக்குத் தோன்றிய ஒரு படம்; எனவே இதைப் பற்றிக் கேட்கச் செல்ல ஓர் இடைவெளி எடுத்துக்கொண்டோம். ஆனால் இல்லை, தொடக்கத்திலேயே முடிந்துவிட்டது: கோபுரம் 1998இல் கட்டியது, சிவன் கோயிலின் கோபுரம் அதைவிடப் பழையது என்றார் முதன்மைப் பெருமாள் சன்னிதியின் தினேஷ் பட்டாச்சாரியார். எனவே எங்கள் படத்திலுள்ளது பெருமாள் கோயிலாக இருக்கவே முடியாது. இக்காலனியக் காலப் படங்கள் எல்லாம், குறிப்பிட்ட இடங்களிலுள்ள நினைவுச்சின்னங்களை அடையாளம் காட்டுவதைவிட, வகைமாதிரியாக்குவதைப் பற்றியவையே.




