முருகன் அபிஷேகம் எளிய, ஆனால் அழகிய நிகழ்வு. வந்திருப்போர் அதிகமில்லை; ஆனால் குருக்களும் (முருகனுக்கு) பெரியவரும் (மயிலுக்கும் வேலுக்கும்) சேர்ந்து செய்கிறார்கள். உபயகாரர்களின் ஒரு குடும்பம் வெளியே ஜமக்காளத்தில் அமர்ந்து எங்களைப் பார்க்கிறது. பால் அபிஷேகத்தின்போது மட்டும் தெரியும் முருகனின் பச்சைச் சாயலை அவர்களிடம் சொல்கிறோம்: அது அவர்களுக்குத் தெரியாதது. மாயங்கள் எங்கும் உள்ளன. சிறிது பிரசாதத்திற்குப் பின்னர் திரும்பி வருகிறோம்.
நிகழ்ச்சி நிரல்:
காலை 8-9: முருகன் அபிஷேகம் (ஆனால் எப்போதும் சற்றுத் தாமதமாகவே நடக்கிறது)


