இக்கோயிலில் எங்களை ஏறத்தாழ யாருக்கும் தெரியாது, எனவே எச்சரிக்கையாக இருக்கிறோம்; ஆனால் அபிஷேகம் செய்யும் மூத்த அர்ச்சகர் (குருமாமா) கேமராக்களுடன் நாங்கள் இருப்பதைச் சற்றும் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. உபயகாரர்கள் யார் என்று சொல்லும் ஒரு சிறிய கல்வெட்டு துர்க்கை சன்னிதி அருகே உள்ளது: அக்குடும்பம் வந்திருக்கிறது; இது தன் மாமனாரின் எழுதிவைப்பு என்கிறார் அப்பெண்மணி. பூசை வழக்கமான வரிசையில் நடக்கிறது: கலசம், சங்கல்பம், அபிஷேகம், ஆராதனை; இதன் பின் பெண்களின் ஒரு குழு அமர்ந்து நெடுநேரம் பாடுகிறது (எல்லாச் செவ்வாய்க்கிழமைகளிலும் வழக்கமான ராகு கால துர்க்கை அபிஷேகங்களுக்கு வருகிறார்கள் போலும், இன்றும் விதிவிலக்கல்ல); அப்போது அர்ச்சகர் துர்க்கையின் பாதங்களில் தொடர்ந்து மலர்களை இடுகிறார். இதன் பின் ஆராதனை.
நிகழ்ச்சி நிரல்:
மாலை 4:30 – ஸ்ரீ துர்க்காம்பாள் பூசை. வேதபுரீஸ்வரர் கோயிலின் பிரம்மோற்சவ ஆயத்தப் பூசைகளின் 1ஆம் நாள் இது.




