நந்திகேஸ்வரர் கோயிலில் மாலை பரதநாட்டிய நிகழ்ச்சி. கலைகளில் வளர்ந்து வரும், நிலைபெற்ற எல்லோருக்கும் நிகழ்த்த இடமளிக்க இக்கோயில் விரும்புவதாகத் தோன்றுகிறது. கடை நடத்தி, பரதநாட்டியம் கற்பிக்கும் ஒருவரை (வரலாறு முதலியவற்றை மேலும் நன்றாக அறிய எங்களுக்கு உதவக்கூடியவராக) திவான் அறிமுகம் செய்ய விரும்பினார்; ஆனால் நாங்கள் புறப்பட வேண்டியிருந்தது. பின்னர் வடிவேலு சாரைச் சந்திக்கிறோம்; சில மாதங்கள் கழித்து, திரௌபதி அம்மன் கோயில் விழாவின் “0ஆம் நாளில்”, லலித்ஸ் கார்டனில் அவர் ஆடுவதையும் காண்கிறோம். அவருடைய பணியும் ஆய்வும் நடன வடிவங்களையும் உருவகங்களையும் பற்றியவை. புதுச்சேரியின் எல்லா மூலைகளிலும் வியக்கத்தக்க அளவு நிலையுறுதியுள்ள, வேரூன்றிய, நன்கு அறிந்த, ஆய்ந்த மனிதர்கள் இருக்கிறார்கள். அவர் கோயிலுக்கு அருகில், மகாத்மா காந்தி சாலையில் ஒரு காலணிக் கடை நடத்துகிறார்.




