ஞாயிற்றுக்கிழமை மாலை. கன்னிகா பரமேஸ்வரி வீதி உலாவில் இருப்பதை அருண் காண்கிறார்! எனவே ஓடியாடிச் சில புகைப்படங்கள் எடுக்கிறோம்: ஊர்வலப் பாதை நீண்டது, முக்கியச் சாலைகளில் வடக்கு-தெற்காக வளைந்து செல்கிறது, நள்ளிரவு அளவிலேயே அவர் கோயிலுக்குத் திரும்புகிறார். கன்னிகா பரமேஸ்வரி ஜெயந்தி (வாசவி ஜெயந்தி) ஆண்டுதோறும் தெலுங்கு வைசாக மாதத்தின் வளர்பிறைப் பத்தாம் நாளில் (தசமி) கொண்டாடப்படுகிறது. மரியாதை செலுத்த வரும் எல்லோருக்கும் மாலையிட்டு ஆசி வழங்கும் ஐயர் மிகவும் மகிழ்ச்சியாகத் தோன்றுகிறார்!




