நாங்கள் அங்கே சேரும்போது காலை 10:30; கோதண்டராமர் சன்னிதியில் திருமஞ்சனம் நடந்துகொண்டிருக்கிறது. உற்சவ மூர்த்திகளுக்கும் சன்னிதியின் முதன்மை மூர்த்திகளுக்கும் ஒரே நேரத்தில் செய்கிறார்கள். மிகவும் அழகு; பலர் கூடியுள்ளார்கள்: ஆண்கள் அடைப்புக்குள்ளும், மற்றவர்கள் வெளியே இருபுறமும் அமர்ந்தும். முறை மற்ற இடங்களில் நாங்கள் கண்டதே; ஆனால் ஒவ்வொரு பொருளையும் கழுவியதும் தூபம் (தூபக்காலுடன்), தீபம் (கொடி விளக்குடன்) – தட்டு விளக்கு, அதாவது மூன்று முறை.
புகைப்படம் எடுக்க எங்கே அனுமதி உண்டு என்பதை அறியப் பாதுகாவலர்களுள் ஒருவர் எங்களுக்கு உதவுகிறார் (ஆனால் முக்கியமானவர்கள் மூலஸ்தானங்களைப் புகைப்படம் எடுப்பதும், மற்றபடி அவ்வழக்கம் தடை செய்யப்பட்டிருப்பதும் ஆகிய முரண் வெளிப்படை). கோயிலின் அன்றாட இயக்கத்தை வடிவமைக்கும் பல முரண்களை மக்கள் அறிந்தே இருக்கிறார்கள்; ஆனால் சமாதானம் காண வழிகள் கண்டுகொள்கிறார்கள்: உண்மையான பக்தியின் முக்கியத்துவத்தையும், நிலை எதுவாயினும் தெய்வம் நம் எல்லோரிடமும் காட்டும் கவனத்தையும் பேசியே. குறைந்தபட்சம் அப்படிச் சொல்கிறார்கள்!




