சிவன் கோயில் கிருத்திகை முறை: முருகனுக்கும் பழனி ஆண்டவருக்கும் அபிஷேகம். விநாயகருக்கு அபிஷேகம் இருந்ததாகத் தோன்றவில்லை. ஆனால் தீபாராதனை விநாயகரிடம் தொடங்கி, பிறகு பழனி ஆண்டவர், இறுதியில் அலங்கரித்த முருகன் (இன்று அவர் முகம் விபூதியால் வெண்மையாக). இதெல்லாம் பிற்பகல் 3:30 மணிக்கு நடக்க வேண்டும்; ஆனால் 5:30க்கு நாங்கள் சேரும்போது அவசரமாக முடிவதாகத் தோன்றுகிறது. இதற்கிடையில் உற்சவர் தயாராகிறார். அழகிய வேட்டியும் புடவைகளும் கட்டிய, மிக எளிய, நேர்த்தியான அலங்காரம் (இது எப்போதும் இருக்கக் கூடாதா?). இரவு 7 மணிக்கு உள் புறப்பாடு; அதற்கு ஓரளவு கூட்டம் சேர்கிறது.
ஆமாம், இன்று செவ்வாய்க்கிழமை; எனவே ராகு கால துர்க்கை பூசை நடந்துள்ளது; பெண்கள் வழக்கம் போல மாலையில் பாராயணம் செய்கிறார்கள்.




