வேதபுரீஸ்வரர் கோயில் இன்று, காலைச் சுவாமி, அம்பாள், துர்க்கை அபிஷேகங்களுடன், முருகன் அபிஷேகமும் செய்திருக்கும். நவராத்திரிக் காலத்தின் நிகழ்வுகளைப் பெரிதும் இயக்குவது பக்தர்களும் உபயகாரர்களுமே போலும் என்று கவனிக்கிறோம். அவர்கள் விரும்பினால் நடக்கிறது; இல்லாவிட்டால் கோயில் தானாக விழாவின் முழு நீளத்தை ஏற்பதில்லை.




