9க்குச் சற்று முன்னர் செல்கிறோம்; கோயில் ஓரளவு காலியாக உள்ளது. வெளியே தற்காலிக மேடையில் நடன நிகழ்ச்சி. உள்ளே ஒரு கொலு அமைக்கப்பட்டுள்ளது. மிக விரிவானது: நடுவில் மேல் படியில் அம்பாள், மயிற்பீலிகளாலான மாலை அல்லது பிரபாவளியுடன், மல்லிகை மாலை சூடி. அவருக்கு இருபுறமும் முறையே காத்தவராயனும் சிவ-பார்வதியும்; அவர்களுக்குக் கீழே கொலுப் பொம்மைகளின் செழுமையான இரண்டு வரிசைகள் நீள்கின்றன. நிறையக் கிருஷ்ணர்கள்! ஏறத்தாழச் சில படிகள் முழுவதும். அடியில் சில பகட்டான நவீன வீடுகள்.




