இச்சிறிய கோயிலிடமிருந்து அதிகம் எதிர்பார்க்காமல் பிரதோஷத்திற்குச் செல்கிறோம். ஆனால் அபிஷேகம், நந்தி உற்சவ மூர்த்தியின்மேல் நிற்கும் அழகிய ஆலிங்கன உமா-சந்திரசேகரர் மூர்த்தியுடன் தொடங்குகிறது. நாங்கள் கண்ட பிரதோஷ நாயகர் மூர்த்திகளுள் மிகவும் அருள்மிகுந்தவற்றுள் இது நிச்சயமாக ஒன்று. அபிஷேகத்தின் ஒவ்வொரு கணத்தையும் சுவைக்கிறோம். மற்ற நாட்களைவிடக் கோயிலின் சூழல் முழுவதும் மிகவும் இனிமையாக உள்ளது; எங்களுக்கு அவ்வாறாக்கியது அந்த அற்புதமான உற்சவர் மட்டும்தானோ என்று யோசிக்கிறோம்.
விநாயகர் உற்சவ மூர்த்தியும் தரையில், செப்டம்பர் 20 ஊஞ்சல் உற்சவ அலங்காரத்தை இன்னும் அணிந்தபடி.
கோபுரத்தையும் விமானங்களையும் படமெடுக்கப் பின்னர் மேலே செல்கிறோம்.




