வேதபுரீஸ்வரர்: வளையல்காப்பு; காலை 10 அளவில் பராசக்தி அம்மனுக்கு அபிஷேகமும் தீர்த்தவாரியும் நடைபெறும். பின்னர் அம்மனைக் கோயிலுக்குள் ஊர்வலமாக எடுத்துச் சென்று, மூலவர் திரிபுரசுந்தரிக்கு நேரெதிரே நிற்கச் செய்வார்கள். மூலவருக்கும் உற்சவருக்கும் தீபாராதனை நடைபெறும். உபயகாரர்கள் அளிக்கும் வளையல்களை உற்சவருக்குச் சாத்தும் நிகழ்வு நடைபெறும்; மாலையில் உற்சவ அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம், பக்தர்களின் வளையல் சமர்ப்பணம் (வேதபுரீஸ்வரர் கோயில் நாராயணன் தந்த தகவல்; அது சரியென்று பின்னர் தெரிந்தது.)
பெருமாள் எங்களைத் தடுத்து நிறுத்தியதால், மாலை ஊஞ்சலைத் தவறவிடுகிறோம்; ஆனால் பராசக்தி தம் அறைக்குத் திரும்பும் கடைசிக் கணத்தைக் காண்கிறோம். பின்புறத்து மகாலட்சுமி சன்னிதியில் ஒரு பூசை நடந்துகொண்டிருக்கிறது. அவருக்குச் சந்தனக் காப்பு, ஆண்டாளின் தொடர்பில் போலும்; அர்ச்சனைக்குப் பெண்கள் வரிசையில் நிற்கிறார்கள். விளக்குகளால் மட்டுமே சன்னிதி அழகாக ஒளிர்கிறது. கனவு போன்ற காட்சி.




