ஆனி உத்திரம். சிவன் கோயிலில் அர்த்தஜாமப் பூசையையும், வெள்ளை சாத்துபடியில் நடராஜரையும் கண்டோம். “உற்சவர் ஸ்ரீ நடராஜருக்கு வெள்ளை சாத்துபடி அலங்காரம், தொடர்ந்து தீபாராதனை, உள் புறப்பாடு நடைபெறும்” என்று கோயில் பத்திரிகை அறிவித்திருந்தது. ஆனால் ஆனி உத்திரம் என்பது மறுநாள் காலை நிகழ்வு மட்டுமே என்று நினைத்து, இதைத் தவறவிட்டோம்.




