செட்டிக் கோயிலுக்கும் அமாவாசை மரபு உண்டு: காலை அபிஷேகம், அமாவாசை இரவுகளில் பிரதோஷ நாயகரை (நாயகியையும்!) உள் புறப்பாட்டிற்கு எடுத்துச் செல்லுதல்: இந்நாட்களைக் கொண்ட பஞ்ச பருவ உற்சவத்தின் 5 நாட்களுள் ஒன்று:
அமாவாசை
பௌர்ணமி
ரவி சங்கிரமணம் (மாதப் பிறப்பு)
கிருஷ்ண பட்ச அஷ்டமி (அல்லது தேய்பிறை அஷ்டமி)
கிருஷ்ண பட்ச சதுர்த்தசி (சிவராத்திரி).
காலையில் அபிஷேகம் அந்தந்தத் தெய்வங்களுக்கு, உறுதி செய்ய வேண்டும். மாலையில் இவ்வனுசரிப்பின் கடைசிப் பகுதியை, உள் புறப்பாட்டை மட்டும், காண்கிறோம். பிரதோஷ நாயகர் முதன்மைச் சன்னிதிக்குத் திரும்பியதும், ஒரு சிறிய பூசை, பிறகு பிரசாதம். நாதஸ்வரக் கலைஞர்கள் இல்லை; கோவிந்தராஜன் போடும் பிரம்மதாளம் மட்டுமே. சங்கரநாராயண சார் வழக்கம் போலத் தவறாமல் இருக்கிறார்.




