இன்று வைகாசி மூல நட்சத்திரம், திருஞானசம்பந்தரின் முக்தி நாளைக் குறிப்பது. மேலே விண்ணிலுள்ள சிவனையும் பார்வதியையும் சுட்டும் ஆள்காட்டி விரலால் அடையாளம் காணக்கூடிய திருஞானசம்பந்தரின் உற்சவ மூர்த்தியை நால்வர் சன்னிதிக்குக் கொண்டுவருகிறார்கள். அவர்களுக்குச் சற்று நீண்ட அபிஷேகம்; அதன் பின் திருஞானசம்பந்தர் வெளியே வந்து, நேர் எதிரேயுள்ள நடராஜர் மண்டபத்திற்குச் செல்கிறார்; அங்கே அவருக்கு உடையும் அலங்காரமும். வந்திருக்கும் சிறிய கூட்டமும் அவருடன் நகர்கிறது. தயாரானதும், அவருக்கு ஆராதனை காட்டி, பிரகாரத்தைச் சுற்றிப் புறப்பாடாக எடுத்துச் சென்று, பிறகு நேராகத் தம் இறைவனின் கருவறைக்குள் அழைத்துச் செல்கிறார்கள். நாங்கள் அடிக்கடி காணும் ஒரு பெண் இதைப் பற்றி என்னிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார்: இப்போது அவர் தெய்வத் தாயிடமிருந்து ஞானப்பாலைப் பெறுவார். முதலில் தம் இறைவனை நோக்குகிறார்; பிறகு குறுக்காக, அங்குள்ள அம்பாள் மூர்த்தியை நோக்க, அவர் சிவஞானப் பாலை அளிக்கிறார். இதற்காக விளக்குகள் முற்றிலும் அணைகின்றன. கருவறை விளக்கொளியால் நிறைகிறது. மறக்க முடியாத தருணங்களுள் ஒன்று; இருந்து, இமைப்பொழுதில் மறைந்துவிடுவதாலேயே மறக்க முடியாதது.
பிரம்மோற்சவம் 12ஆம் நாள், விடையாற்றி 2ஆம் நாள் நிகழ்ச்சி நிரல்:
காலை 9:00 – நால்வர் அபிஷேகம், திருஞானசம்பந்தர் விழா
இரவு 7:00 – இந்திர விமான ஊர்வலம்.




