விசாகத்துடன் தொடங்கிய உற்சவத்தின் தொடர்ச்சி இது, 4ஆம் நாள். பஞ்சமூர்த்திகள்: வழிநடத்தும் விநாயகர்; ஆனால் வழக்கத்திற்கு மாறாக, கடைசியில் வராமல், அவருக்கு அடுத்தே சண்டிகேஸ்வரர்; தொடர்ந்து, பிரமாண்டத்திலும் பிரமாண்டமாக, துணைவியருடன் முருகன் (அவருடைய திருவிழாதானே), ஆனால் முருகனின் சுழன்று விரியும் பெரும் மாலைகள் துணைவியரை ஏறத்தாழ மறைக்கின்றன; சோமாஸ்கந்தர்; இறுதியில் தனி அம்பாள். கோயிலில் நாங்கள் அடிக்கடி காணும் பூசாரி உடன்வருகிறார். சில சிறுவர்களும் ஏறி வருகிறார்கள். இது பிரமாண்டமான, ஆனால் சற்றுக் கவனம் சிதறிய ஊர்வலம் என்பதில் ஐயமில்லை. வணிகப் பகுதிகளையும் அங்காடிகளையும் கடந்து செல்கிறது; அங்கே பயபக்தியையும் அலட்சியத்தையும் சம அளவில் சந்திப்பதாகத் தோன்றுகிறது.




