வேதபுரீஸ்வரருக்குப் பூத வாகன வீதிப் புறப்பாடு இருந்த அதே நாளில், பெருமாள் பொன் சிம்ம வாகனத்தில் பிரமாண்டமாக வெளிவந்து அதற்கு ஈடுகொடுத்தார். அவருக்கு இணையாக, பொருத்தமாக உடன்வந்தவர்கள், பொன்னிறக் கருவிகளுடன் மஞ்சள் உடையணிந்த சாக்ஸபோன் கலைஞர்கள்; அருமையான வீதிக் கச்சேரி வாசித்தார்கள் (அவர்கள் வாசித்த இடத்தில், ஆப்பிரிக்க செப்புக்காய் மரத்தின் மஞ்சள் மஞ்சளான மலர்கள் எல்லாம் தரையில் உதிர்ந்திருந்தன). இதற்காகவே அவர்களை அழைத்திருந்தார்கள். தம் பெரிய பொற்சிங்கத்தின்மேல் அவர் உண்மையிலேயே அழகாகவும் பிரமாண்டமாகவும் இருந்தார்: ஆனால் இன்று அடுத்த வீட்டுச் சிவனே எல்லோர் கவனத்தையும் கவர்ந்துவிட்டார்.
பெருமாளின் பிரம்மோற்சவம் 2ஆம் நாள் நிகழ்ச்சி நிரல்:
காலை 7:00: பொன் சூரிய பிரபை ஊர்வலம் (அலங்காரம் சூரிய நாராயணராம்) | காலை 10:00: திருமஞ்சனம்
இரவு 8:00: பொன் சிம்ம வாகனத்தில் ஊர்வலம் (அருணின் புகைப்படங்கள்; சிவன் கோயிலில் ஒரு டஜன் கொம்புக் கலைஞர்களின் நாள் இது)




