இதற்காக அதிகாலை 4 மணிக்குள் எழுந்து வெளியே! மேலோட்டமாக, வேதபுரீஸ்வரர், பெருமாள் கோயில் பிரம்மோற்சவங்களுக்கு இடையே பெரிய வேறுபாடு எதுவும் என்னால் சொல்ல முடியவில்லை. ஒன்றில் கணபதி தாளம் பாடினார்கள், மற்றொன்றில் கருட தாளம். பெருமாளின் வீதிப் புறப்பாட்டிற்குப் பின்னே, வேதம் ஓதும் ஒரு கோஷ்டி எப்போதும் உண்டு. முன்னே பிரபந்த கோஷ்டி இல்லை. எல்லா நாட்களிலும் பெருமாளுக்குத் திருமஞ்சனம்; ஆனால் (நித்திய பூசை முறைகளுக்கு மேல்) உற்சவர் அபிஷேகங்கள், சிவன் கோயிலின் எல்லாப் பிரம்மோற்சவ நாட்களிலும் வழக்கமல்ல.
மாலைப் புறப்பாட்டிற்கு நாங்கள் செல்லவில்லை: ஆனால் அவர் ஓர் அன்னத்தின்மேல் கனிவாக வெளிவந்தார் என்பதில் ஐயமில்லை...
பிரம்மோற்சவம் 1ஆம் நாள் நிகழ்ச்சி நிரல்:
அதிகாலை 3:30: த்வஜாரோஹணத் தொடக்கம்
அதிகாலை 4:00 – 5:30: மேஷ லக்கினத்தில் த்வஜாரோஹணம், தொடர்ந்து மங்களகிரியில் வீதி ஊர்வலம்
இரவு 7:00: பூசைத் தொடக்கம்
இரவு 8:00: அன்ன வாகனத்தில் வீதி ஊர்வலம்




