மாலையில் இதற்குச் சென்றேன். எளிய நிகழ்வு: மாலை 5 அளவில் எளிய அலங்காரத்தில் தாயாரை வெளியே கொண்டுவந்து, 3 முறை பிரதட்சிணம், உள்ளே எடுத்துச் சென்று ஊஞ்சலில் வைத்தல் (நாதஸ்வரத்தில் லாலிப் பாட்டுடன்: லாலி என்பது ஒருவகைச் சடங்கு/ விழாப் பாடல்; பெரும்பாலும் தெய்வத்தை உறங்கச் செய்யும்போது, குறிப்பாகக் கோயிலின் அல்லது வீட்டின் விழாத் தொடர் நிறைவை நெருங்கும்போது, வாசிப்பது அல்லது பாடுவது). பிரசாதத்திற்கு அமர்ந்தேன்; என் குடையை அங்கே விட்டுவிட்டேன் போலும். தொலைந்த குடைக் கதைகள் #1.




