திரௌபதி அம்மன் கோயிலில் தாமதமாகிவிட்டது, ஆனாலும் சரியான நேரத்தில் இங்கே வந்துவிட்டோம்: நிகழ்வின் செலவை ஏற்கும் வேறொரு குடும்பமும், ஒரு சிறிய குழுவும் வந்திருக்கிறார்கள். சடங்குகள் மிகவும் வேதமுறையிலானவை, செட்டிக் கோயிலைப் போன்றவை, ஆனால் எளியவை, குறுகியவை. கொடி கோயிலைப் பிரதட்சிணம் செய்து (அதாவது கௌசிக கோயிலின் வழியே சென்று, கிழக்குப் பக்கம் வெளிவந்து) ஏற்றப்படுகிறது. 3 அல்லது 4 பேருக்குக் காப்புக் கட்டுகிறார்கள்.
பிரசாதம் கேசரியும் சுண்டலும். முற்பகல் 11:30க்குள் எல்லாம் முடிந்துவிடுகிறது. சில வீதிகள் தள்ளி வாழும் ஒருவருடன் சற்று நேரம் பேசுகிறோம். கோயிலுக்கு நேர் எதிரே/ கிழக்கேயுள்ள மனையில் இன்றும் உள்ள ஒரு கிணற்றில் இந்த அம்மன் இருந்ததாக அவர் சொன்னார். கௌஸ் அதைப் பற்றி ஒரு கனவு கண்டு, அம்மனை வெளியே எடுக்கச் செய்தார். ராஜராஜ சோழன் காலத்திலேயே எல்லையம்மன் கோயிலுக்கு மக்கள் சென்று வந்தார்கள் என்றும் சொன்னார்: பெரிய வில்லியனூர் ஈஸ்வரன் கோயிலுக்கு இது எல்லை.
கன்னியாகுமரியில் திருவள்ளுவரை வடித்த அதே சிற்பியே முருகன் மூலவரையும் செய்தாராம்.




