சகஸ்ர சங்காபிஷேகத்திற்கான ஏற்பாடு

மணக்குள விநாயகர் கோயில்ஆண்டு விழாசங்காபிஷேகம்

பத்திரிகை குறிப்பிடுவது: விக்னேஸ்வர பூசை, வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரகணம், அங்குரார்ப்பணம், யாகசாலை முதல் கால யாக பூசை, பூர்ணாகுதி, தீபாராதனை.

மாலை 7 – அருண் கோயிலுக்குள் நுழையவிருந்தபோது, பல தட்டுகளுடனும் ஒரு கலசத்துடனும் அர்ச்சகர்களின் ஒரு கூட்டம் வெளிவருகிறது. தவில், நாதஸ்வரம் உடன்வர, ஓர் ஆராதனைக்காகத் தல விருட்சத்திற்குச் செல்கிறார்கள். புனித மரம் ஒரு தொலை மூலையில், நெரிசல் மிகுந்த செருப்பு நிலையத்தின் பின்னே மறைந்திருப்பதைக் காண்பது வியப்பு.

சங்காபிஷேகத்திற்குத் தயாராக, அக்கூட்டம் விரைவிலேயே கோயிலுக்குள் திரும்புகிறது.

மாலை 7:12 – மேடையின் பின்புறத்தில் வழக்கமான பஞ்ச விநாயகர்கள்; நடுவில் ஒரு ஹோம குண்டம். ஹோம குண்டத்திற்கு நேர் பின்னே, ஒரு பீடத்தில், இரண்டு சங்குகள்: வெள்ளிப் பூண் இட்ட முனையுடைய அழகிய பெரிய வெண்சங்கு ஒன்று, முழுவதும் வெள்ளிக் கவசத்தால் மூடிய அதைவிடப் பெரிய சங்கு ஒன்று. மற்ற சிறிய சங்குகளைத் தயார் செய்து மேடையின் வலது மூலையில் வைத்துள்ளார்கள். உற்சவ மேடையின் முன், உபயகாரர் சங்கல்பத்திற்காக ஒரு சிறிய கம்பளம் விரித்துள்ளார்கள். மற்ற கூட்டம் தடுப்புகளின் பின்னே நிறுத்தப்பட்டுள்ளது. மனைவியுடன் சங்கல்பத்திற்கு அமர்ந்திருப்பவர், கோயிலின் பராமரிப்பு அலுவலர் என்று தெரியவருகிறது. ஒரு கையில் ஆரஞ்சுப் பழமும் மறு கையில் புனித நீரும் ஏந்தி, இருவரும் மந்திரங்களைத் திருப்பிச் சொல்கிறார்கள். தொடங்கவிருக்கும் “சகஸ்ர சங்காபிஷேகத்தை” அறிவித்துச் சங்கல்பம் நிறைவடைகிறது. அதே நேரத்தில், உபயகாரர்களுக்குச் சற்றுத் தொலைவு முன்னே, தரையிலுள்ள ஒரு மண்டலத்திற்கு ஒரு பூசை செய்யப்படுகிறது.

மாலை 7:30 – ஓர் அர்ச்சகர் பல மந்திரங்களை ஓத, அதற்கு இசைய, சம்மணமிட்டு அமர்ந்திருக்கும் வேறு மூன்று அர்ச்சகர்கள் புஷ்பார்ச்சனை செய்கிறார்கள். ஒரு கட்டத்தில், மலரைத் தலைக்கு மேலே பிடித்து, பிறகு நெற்றியிலும் நெஞ்சிலும் இரு முழங்கால்களிலும் தொட்டு, முத்திரைகளும் அசைவுகளும் செய்து, பிறகு மலர்களை மேலே தூவுகிறார்கள். இச்சைகைகளும் கையசைவுகளும் வெவ்வேறு மந்திரங்களுக்கு வேறுபடுகின்றன; பார்க்க எல்லாமே ஈர்ப்புடையவை.

மாலை 7:43 – சங்குகளின் மேலும் அவற்றைச் சுற்றியும் மேடையில் பிற ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன. இங்குள்ள சடங்குமுறை விரிவானதாகத் தோன்றுகிறது.

இப்பூசையை இந்நேரலையில் காணலாம்.

மணக்குள விநாயகர் கோயில்: மேலும் களக்குறிப்புகள்

மணக்குள விநாயகர் கோயில் · விநாயக மகா சதுர்த்திமணக்குள விநாயகர் · விநாயக மகா சதுர்த்தி

எல்லாவற்றையும் ஆளும் ஒரே சதுர்த்தி

மிக அதிகக் கூட்டத்தாலும் புகைப்படம் எடுப்பதற்கான தடைகளாலும் நாங்கள் செல்லவில்லை. ஆனால் பத்திரிகையிலுள்ள அவர்களின் நிகழ்ச்சி நிரல் இது: “வரும் திங்கட்கிழமை, 14.09.2026, ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, அதிகாலை 4:00 மணிக்குக் கோயில் நடை திறக்கப்படும். கோயில் நிர்வாகத்தின் சார்பில், ஸ்ரீ மணக்குள விநாயகருக்குச் சிறப்பு அபிஷேகம், தூப தீபம், நைவேத்தியம், தீபாராதனை நடைபெறும். தீபாராதனைக்குப் பின், “மூலவர் ஸ்ரீ மணக்குள விநாயகர்” தங்கக் கவசம் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.” முழு நிகழ்வின் நேரலை (தந்தி டிவி), பிரிட்டன் தமிழ் பக்தியில்

மேலும் வாசிக்க
மணக்குள விநாயகர் கோயில் · பிரம்மோற்சவ விடையாற்றி 3ஆம் நாள்மணக்குள விநாயகர் · பிரம்மோற்சவ விடையாற்றி 3ஆம் நாள்

விரைவான ஒரு நிறுத்தமும் அவ்வளவு விரைவில்லாத ஓர் உரையாடலும்

காலையில் முன்னரே உற்சவ மூர்த்தி அபிஷேகம். பால விநாயகரிடம் கூட்டம். அங்கே எங்களுக்குத் தெரிந்த ஒரு குருக்களுடன், நீண்ட சடங்குகளில் கோயிலுக்கு வரும் கூட்டத்தின் பெருகிவரும் பொறுமையின்மையைப் பற்றிச் சற்று நேரம் பேசினோம்; உண்மையில் அவை, அடிக்கடி காணும் வேறு சிலவற்றைவிட முக்கியமானவை. எடுத்துக்காட்டாக, காலப் பூசையுடன் பஞ்சாசன பூசை செய்ய வேண்டும். செய்கிறார்களா? திரை மூடி, ½ மணி நேரமாகும். இது யாருக்கு வேண்டும்? தீபாராதனையும் அலங்காரமுமே “பூசை” ஆகின்றன: ஆகம/ தாந்திரிகச் சடங்கு வழக்கங்களின் முழு வரிசையையும் இடம்பெயர்க்கும், பக்தரை மையமாகக் கொண்ட திசை நோக்கிய நகர்வின் மற்றோர் எடுத்துக்காட்டு. இத்திருப்பணி என்ன மாற்றங்களைக் கொண்டுவரும்? முந்தைய ஒரு கும்பாபிஷேகத்தின்போது, இப்போதைய மண்டபப் பகுதியிலிருந்து கோயிலைப் பிரித்த சுவரை உடைத்தார்கள். ஆகமங்களின்படி, கோயில்களுக்கு (பெருமாள் கோயிலில் உள்ளது போல) மூடிய உள் பிரகாரம் இருக்க வேண்டும்; இப்பிரகாரத்தில் பக்தர்கள் வலம் வருவது, தெய்வத்திற்கு ஆற்றல் தருவதன் ஒரு பகுதி. ஆனால் இங்கே, தடையற்ற திறந்த சூழலுக்காகவும் வசதிக்காகவும் அது போய்விட்டது. செய்தித்தாள்களைப் படித்தாலோ, வெளியேயுள்ள பெரியார் பேத்திகள் எல்லோரையும் கேட்டாலோ, அடிக்கடி எதிரெதிராக நிறுத்தப்பட்டு இறுக்கத்தில் இருக்கும் சமஸ்கிருதத்தையும் தமிழையும் பற்றியும் பேசினார்: “முத்ரா ரூபம்” காணச் சமஸ்கிருதம் வேண்டும்; ஆனால் உணர்ச்சிகளை எழுப்பத் தமிழைத் தவிர வேறு மொழி இல்லை. ஒவ்வொன்றின் இடத்திற்காகவும் பேசினார்: உள்ளத்தில் காண முன்னதையும், ஒன்றிணையப் பின்னதையும் வலியுறுத்தி. ஆர்வமூட்டும், ஒருங்கிணைக்கும், சமநிலையான பார்வை என்று எங்களுக்குத் தோன்றியது.

மேலும் வாசிக்க
மணக்குள விநாயகர் கோயில் · பிரம்மோற்சவம் 10ஆம் நாள்மணக்குள விநாயகர் · பிரம்மோற்சவம் 10ஆம் நாள்

பௌர்ணமி தீர்த்தவாரி

66ஆம் பிரம்மோற்சவத்தின் (ஆகஸ்ட் 18 அன்று தொடங்கியது) அன்றாட அபிஷேக-அலங்காரம்; நேரலை இங்கே (பிரிட்டன் தமிழ் பக்தி).

மேலும் வாசிக்க
மணக்குள விநாயகர் கோயில்மணக்குள விநாயகர்

பிரம்மோற்சவம் 6ஆம் நாள்

திட்டமிட்ட கும்பாபிஷேகத்தால் 66ஆம் பிரம்மோற்சவம் முழுமையாக நடக்கவில்லை; ஆனால் அபிஷேகத்தின் நேரலை இங்கே: மணக்குள விநாயகர் கோயில் 66ஆம் ஆண்டுப் பிரம்மோற்சவ அபிஷேக அலங்காரம்

மேலும் வாசிக்க
மணக்குள விநாயகர் கோயில்மணக்குள விநாயகர்

பிரம்மோற்சவம் 5ஆம் நாள்

திட்டமிட்ட கும்பாபிஷேகத்தால் 66ஆம் பிரம்மோற்சவம் நடக்கவில்லை; ஆனால் ஆகஸ்ட் 18 அன்று தொடங்கி நாள்தோறும் அபிஷேக-அலங்காரம் நடக்கிறது; இன்றைய நிகழ்வின் நேரலை இங்கே (பிரிட்டன் தமிழ் பக்தி).

மேலும் வாசிக்க
எல்லாக் களக்குறிப்புகளும் →