ராமர்-சீதை-லட்சுமணர்-அனுமன் உற்சவ மூர்த்திகளின் அலங்காரத்தையும் ஆராதனையையும் தீபா காலையில் கண்டார் (முந்தைய மாலை ஒருமுறை சென்று, தனியாருக்குச் சொந்தமாகவும் அவர்களால் நிர்வகிக்கப்பட்டும் வரும் பல கோயில்களுள் ஒன்றான இந்த ஆரிய வைசிய செட்டிக் கோயிலின் பூசைகளில் கலந்துகொள்ள அர்ச்சகரின் அனுமதியைப் பெற்றிருந்தார்). இது 14 நாள் ராமர் உற்சவத்தின் (ராம நவமி, ராமர் பட்டாபிஷேக விழா, மார்ச் 27 – ஏப்ரல் 9) ஒரு பகுதி. 25-30 பேர் வந்திருக்கிறார்கள்; பெண்கள் ராமாவளியும் நாம ராமாயணமும் பாடுகிறார்கள். பிரசாதம் செழுமையானது; மோரும் பானகமும் சிறப்பாக வழங்கப்படுகின்றன. இவற்றை வழங்குவதன் பொருள் என்னவாக இருக்கும்?




