முத்துமாரியம்மன் கோயிலில் நாங்கள் இதுவரை கண்டவற்றுள் மிகப் பெரிய நிகழ்வு; அதை நடத்த வெளியிலிருந்து குருக்கள்மாரை அழைத்திருக்கிறார்கள். வேதபுரீஸ்வரர் கோயிலின் உதவியாளர்கள் சிலரைக் காண்கிறோம்; அரசு மாமா நாளை வருவார் என்கிறார்கள்; ஆனால் இன்று, நாங்கள் முன்னர் காணாத மற்றோர் அர்ச்சகர் தலைமை. செட்டிக் கோயிலில் நாங்கள் எப்போதும் காணும் செட்டியார்கள் இங்கே உபயகாரர்களாக.
மாலை நிகழ்ச்சி நிரல்: மாலை 6க்குப் பின்: 1ஆம் கால யாகம்: ஸ்ரீ கணபதி பூசை, சுஸ்தி புண்யாகவாசனம், பஞ்சகவ்யம், அங்குரார்ப்பணம், ரட்சாபந்தனம், 1ஆம் கால அதிவாச அஷ்டோத்தர சத கலச பூசைகள், விசேஷ மந்திர பூசைகள், ஹோமங்கள், பூர்ணாகுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்.
நடுவில் - அம்மன் கலசம்
அவரைச் சுற்றி - 9
வடமேற்கு - 23 கலசங்கள்
வடகிழக்கு - 28
தென்மேற்கு - 23
தென்கிழக்கு - 25
ஹோமக் குண்டத்திற்கு முன்னே 1 கலசம் - வருண கும்பம்
உபயகாரப் பெண்கள் காமாட்சி விளக்கும் உயரமான விளக்குகளும் ஏற்றுகிறார்கள்
கணபதி, மூல அம்பாள் ஆராதனைக்குப் பின், வருணனை ஆவாகனம் செய்து, வழிபட்டு, எல்லாக் கலசங்களின்மேலும், கோயிலெங்கும், வந்திருக்கும் பக்தர்கள் எல்லோர்மேலும் தெளிக்கிறார்கள். பிறகு, தேங்காயும் மாலையும் இருந்தபடியே, மீண்டும் அதே இடத்தில் வைக்கிறார்கள்.
ஞானவேலுக்கும் மற்றொரு பூசாரிக்கும் காப்புக் கட்டுகிறார்கள்.




