மாலை 6:30 மணிக்கு நாங்கள் நுழையும்போது, செட்டி காளத்தீஸ்வரர் கோயிலிலும் ஆவணி மூல உற்சவம் நடந்துகொண்டிருக்கிறது. சுவாமி, அம்பாள் உற்சவ மூர்த்திகள் நந்தி வாகனத்தில் வெளியே. அர்ச்சகரும் சங்கரநாராயண செட்டியாரும் உபயகாரரும் மாறி மாறி ஒரு பாத்திரத்தில் மண்ணை அள்ளிப் போடுகிறார்கள்; அதை ஜெயசங்கர் உள் புறப்பாட்டிற்குக் கூடையில் தலையில் சுமக்கிறார்.
பெருமாள் வாஸ்து சாந்தி தாமதமாகத் தொடங்குகிறது; அதற்குள் நாங்கள் பெருமாள் கோயிலுக்குச் செல்கிறோம். தீபா தி செட்டிக் கோயிலுக்குத் திரும்ப, இன்னும் எதுவும் நடக்கவில்லை. செட்டிக் கோயிலில், ஹோமக் குண்டத்திற்கு முன்னே, ஒரு பலகையின்மேல் கோலம் போன்ற மண்டலமாகச் சக்கரத்தாழ்வார்.
அந்நாளின் நிகழ்ச்சி நிரல்:
மாலை 6: பாகவத க்ஷேத்திரம், யஜமான சங்கல்பம், புண்யாகவாசனம், மிருத்சங்கிரகணம், அங்குரார்ப்பணம், வாஸ்து சாந்தி, பஞ்சகவ்யப் பிரதிஷ்டை, பவித்ரப் பிரதிஷ்டை, ஏகாந்த ஜப்யம், சயனாதி வாசம்




