கோயிலில் கட்டுமானம் நடந்துகொண்டிருந்து, உற்சவம் எதுவும் நடக்காவிட்டாலும், அதைப் பற்றிய பரந்த பின்னணியை அறிய, எல்லையம்மன் கோயிலில் சதீஷ் குருக்களைச் சந்தித்தோம். ஊழலாலும், நிலமும் சொத்தும் இழந்ததாலும், இக்கோயிலுக்கு ஒரு காலத்தில் இருந்த முக்கியத்துவமும் பின்னர் அதன் வீழ்ச்சியும் பற்றி நிறையப் பேசினார். இப்போதுள்ள உபயகாரர்களையும் தொடர்பில் வைத்திருக்கிறார்: அவர்கள் ஏற்ற பூசைகளைச் செய்து, புகைப்படங்கள், பிரசாதம் முதலியவற்றை அனுப்பி. தொடர்ச்சி காக்கப்படுவது அவ்வழியில் மட்டுமே. இவ்வாறு திருப்பணியில் இருக்கும் கோயில்கள், நிலைபெற்ற தங்கள் ஆதரவுத் தளங்களை இழக்கும், இருப்பையே அச்சுறுத்தும் ஆபத்தை எதிர்கொள்கின்றன.
