தீபா ஊரில் இல்லாததால், அருண் இதற்கு இருந்தார். இதற்காக வெளியிலிருந்து ஓர் அர்ச்சகரும் 3 உதவியாளர்களும் அழைக்கப்பட்டார்கள். ஸ்ரீதர் பட்டாச்சாரியாரும் இருந்ததால், மொத்தம் 5 பேர். பெருமாள் கோயிலை அடுத்த வழக்கமான இடத்தில் யாகசாலை. அங்குரார்ப்பணத்திற்காகச் சேகரித்த மண்ணைச் சுமக்க நியமிக்கப்பட்டவர் ஸ்ரீதர் பட்டாச்சாரியார். அதன்மேல் பாலும் நீரும் வார்க்கிறார்கள், ஆராதனை நடக்கிறது; பிறகு வாஸ்து சாந்தி பூசை முறையின் பகுதியாக, வாஸ்து புருஷ உருவை எரித்து வெளியே எடுத்துச் செல்கிறார்கள். பிறகு விஷ்வக்சேனரின் மிகச் சிறிய உற்சவருக்கு உள் புறப்பாடு.
காலை 10:30: திருமஞ்சனம்
மாலை 6 – இரவு 7:30: மிருத்சங்கிரகணம், அங்குரார்ப்பணம், வாஸ்து சாந்தி, ஸ்ரீ விஷ்வக்சேனர் உள் புறப்பாடு




