மணிமுத்துமாரியம்மன் கோயிலின் மணிவண்ணன் சார் சிலமுறை குறிப்பிட்டிருந்த நந்திகேஸ்வரர் கோயிலுக்குள் நுழைய இறுதியில் முடிவு செய்தோம். இளையவர்கள் இருவர் அர்ச்சகர்கள்: சிவவிஜய் சுவாமியும் சிவகதிர் சுவாமியும். நாங்கள் அறிந்தவை சில:
• இக்கோயில் திவான் கந்தப்ப முதலியாரின் குலக்கோயில்; நாடு சண்முக வேலாயுத முதலியாரின் சமாதிக் கோயில் [சாதித் தலைவரும் வேளாளரும் மொழிபெயர்ப்பாளரும் தொண்டைமண்டல வெள்ளாளர் சமூகத்தைச் சேர்ந்தவருமான நாடு சிதம்பர முதலியாரின் மகன்; மரபுவாதி, ஒன்றிணைதலை எதிர்த்தவர், (1845/1846–1908)]
• இங்கே எல்லாப் பூசைகளும் தமிழில் நடக்கின்றன. சென்னை எஸ்.ஆர்.எம். கல்லூரியின் ஒரு தமிழறிஞரிடம் அர்ச்சகர்கள் பயிற்சி பெற்றார்கள்
• கோயிலின் அழைப்பின்பேரில், பிரதோஷ நாட்களிலும் பிற நேரங்களிலும் சைவத்தைப் பற்றிப் பேசும் டாக்டர் சங்கரா தேவியையும் அர்ச்சகர் குறிப்பிடுகிறார்.
• கார்த்திகைத் திருவாதிரை: மணக்குள விநாயகர் இப்போதும் மாசி மகத்தின்போதும் தங்கத் தேரில் இங்கே வருகிறார்
• தட்சிணாமூர்த்தியைப் போல, தெற்கு நோக்கிய ஈஸ்வரர்
• இங்கே சிவன் சித்தேஸ்வரர், பார்வதி சித்தேஸ்வரி
• கோயிலைப் பற்றி நாங்கள் கண்ட ஒரு யூடியூப் காணொளி.




