எங்கள் தகவல்களை, ஒரு நேரத்தில் ஒரு வழிபாடு, ஒரு திருவிழா, ஒரு நாள்-நேர-நிகழ்வு என, எப்படித் திரட்ட வேண்டியிருந்தது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு. அக்கினி நட்சத்திரம் தொடர்பான கோயில் பூசைகளைப் பற்றிக் கேட்க, அங்காளம்மன் கோயிலுக்கு ஒரு விரைவான வருகை: 15 நாள் நட்சத்திர காலத்தின் முடிவில் நடக்கும், இளநீருடன் அக்கினி நிவர்த்தி அபிஷேகத்தையும், அம்மனின் தோள்களில் (? உடலில்?) வெண்ணெய் வைப்பதையும் மட்டுமே ஸ்ரீராம் குருக்கள் குறிப்பிட்டார். அக்கினி நட்சத்திர தோஷ நிவர்த்தி என்பது, 21-25 நாள் அக்கினி நட்சத்திர (கத்திரி வெயில்) காலத்தின் முடிவில், கடும் வெப்பத்தால் வரும் அமங்கலத்தை நீக்கவும் ஆசி வேண்டவும் செய்யும் சடங்குகளையும் பிரார்த்தனைகளையும் குறிக்கிறது




