அங்காள நகர் அங்காளம்மன் கோயிலின் ஆண்டு வழிபாட்டு வழக்கங்களை அறிய, மிகவும் வேலைகளுள்ள ஸ்ரீராம் குருக்களுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அமர்கிறோம். அழைப்புகளாலும், வேலைகளுடனும் வேண்டுகோள்களுடனும் வருபவர்களாலும் அடிக்கடி இடையூறு; ஆனாலும் எங்களிடமும் தம்மிடம் வரும் எல்லோரிடமும் மிகவும் பொறுமையாக இருக்கிறார். அவ்விடத்தைச் சுற்றித் திரளும் சுற்றுவட்டார இளைஞர்களுடன் அவர் கோயிலில் பேசிக்கொண்டிருப்பதை அடிக்கடி காண்கிறோம். அங்காளம்மன் கோயிலை நிர்வகிப்பவர்கள் அவரும் மூத்த குருக்களும் மட்டுமே. அவர்கள் அர்ச்சகர்களாக இருப்பது போலவே வழிகாட்டிகளாகவும் ஆசான்களாகவும் செயல்படுவதாகத் தோன்றுகிறது.




