ஞாயிற்றுக்கிழமை மாலைகளில் செட்டிக் கோயிலில் நடக்கும் வழக்கமான பைரவர் அபிஷேகத்திற்குத் தம்மை அழைத்துச் செல்லும்படி அருணா மாமி கேட்டு வந்தார். கோடீஸ்வர சிவாச்சாரியார் அங்கே பைரவருக்குப் பூசை செய்துகொண்டிருக்கிறார்.
மற்ற கோயில்களுள் பெரும்பாலானவற்றில் பைரவர் பூசைகள் பைரவாஷ்டமியில் மட்டுமே நடக்கின்றன; ஆனால் இங்கே, (வில்லியனூர்) திருக்காஞ்சி கோயிலில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் சரபேஸ்வரர் (அல்லது சரபர்) பூசைகளுடன் ஏதோ ஒரு தொடர்பையும் (எப்படி?), அதனால் அவ்வழக்கம் இங்கே வந்ததையும் அவர் குறிப்பிடுகிறார். மொரட்டாண்டியிலுள்ள ஒரு கோயிலில் (ஒரு சித்தரின் ஜீவசமாதி இடம் அது) சரபேஸ்வரர் பூசைகள் நடக்கும்போது, அவர் ஏன் திருக்காஞ்சி வரை போக வேண்டும் என்று அருகே பைரவாஷ்டகம் ஓதிக்கொண்டிருக்கும் ஒரு பெண் கேட்கிறார். அதற்கும் செட்டிக் கோயில் வழக்கத்திற்கும் உள்ள தொடர்பு தெளிவாக இல்லை. எந்த உக்கிர மூர்த்தியையும் (பைரவர், சரபேஸ்வரர், துர்க்கை/ காளி) வழிபடக்கூடிய நேரம் இது என்கிறார் அப்பெண்.
4ஆம் கால சிவ அபிஷேகம் நடந்துகொண்டிருக்கிறது. அந்த அருமையான பணியாரங்களைச் செய்யும் பெண்மணியின் கடைக்கு அடுத்து, வெளியே உள்ள கடையில் ஒரு குவளை தேங்காய்ப்பால் சர்பத்துக்காகப் புறப்படுகிறோம்.




